தாய்நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தமது உயிர்களை பணயமாக வைத்து போராடிய படைவீரர்களுக்கு ‘நமக்காக நாம்’ ரணவிரு வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 90 ரணவிரு வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நடைபெற்றது.
‘சத்விரு சங்ஹி’ திட்டத்தின் கீழ் வீமைப்புக்காக 503 இராணுவத்தினருக்கு தலா ஏழு லட்சத்து ஐம்தாயிரம் ரூபா வழங்கிவைக்கப்பட்டது. இராணுவத்தினருக்கான 65 காணி உரிமைப்பத்திரங்கள் வழங்குதல், ‘விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவன் விஜேவர்தன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புப்படையணியின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.