அரச ஊழியர்களின் நலனுக்காக அரசாங்க நிர்வாக அமைச்சினால் இரு வீடமைப்புத் திட்டங்கள்

ரச சேவையில் நிரந்தரமான ஊழியர்க்களின் வாழ்க்கைத் தரத்தினை அதிகரிப்பதற்காக மற்றுமொரு ஆரோக்கியமான முன்னெடுப்பை மேற்கொள்வதற்கு அரசாங்க நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் மூலம் அரச ஊழியர்களின் வீட்டுப்பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படவுள்ள ஒன்று தான் "நில செவன" வீட்டுத்திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் கட்டப்படவிருக்கும் கண்டி, குண்டசாலை பகுதி வீடமைப்புத் திட்டம் பற்றிய ஆய்வு சென்ற 23 ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளது. குண்டசாலையில் அமைக்கப்படவுள்ள "நில செவன" வீடமைப்புத் திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சில பிரச்சினைகள் தோன்றியமையால், மாற்று இடம் ஒன்று தற்போது இனங்காணப்பட்டுள்ளதுடன், திறந்த டென்டர் மூலம் ஒப்பந்தக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

"நில செவன" திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் வீடுகளில் 80 வீதமானவற்றை சலுகை விலையில் அரச ஊழியர்களுக்கு பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு சந்தர்ப்பம் அளிக்கவுள்ளதுடன், 20 வீதமான வீடுகளை பெற்றுக்கொள்வதற்குத் தனியார் துறையினர்க்கு வாய்ப்பளிக்கப்படும்.

இத்திட்டத்திற்கு அப்பால், அரசாங்க நிர்வாக அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் ஏனைய வீடமைப்புத் திட்டங்கள் மூலம், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள அரச ஊழியர்களின் விகிதாசாரத்திற்கேற்ப 25 வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் கீழ் கம்பஹா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான வீடமைப்புத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தின் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இத்திட்டங்களின் மூலம் அமைக்கப்படும் வீடொன்றை 5 வருடங்களுக்கு ஊழியர்களின் தர அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் அமைச்சு எதிர்பார்ப்பது, ஊழியர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்து மக்களுக்கு உயர்ந்த சேவை வழங்கப்படவேண்டும் என்பதாகும். கண்டியில் நிர்மாணிக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தில் 32 தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன. இது 2018 இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மொனறாகலை வீடமைப்புத்திட்டத்தில் 32 தொகுதி வீடுகளும், கொழும்பில் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத்திட்டத்தில் 49 தொகுதி வீடுகளும்அமைக்கப்படவுள்ளன. இதேவேளை, கம்பஹா மாவட்ட வீடமைப்புத்திட்டம் களனி பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் 32 தொகுதி வீடுகளுடன் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த வீடமைப்புத்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் சென்ற 23 ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது. இதன் போது அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் வீடமைப்புக் கிளையின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாந்த வீரசிங்க உள்ளிட்ட ஊழியர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

கஹட்டோவிட்ட ரிஹ்மி
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -