மறிச்சுக்கட்டி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளமைக்காக உலமா கட்சி ஜனாதிபதியை பாராட்டியுள்ளது. இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு அணுப்பியுள்ள கடிதத்திலேயே இப்பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கண்டியில் நடைபெற்ற மே தின கூட்டத்தின் போது முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்குமாறு உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை ஜனாதிபதியும் ஏற்றிருந்தார்.
பணத்துக்கோ பதவிகளுக்கோ பணியாத உலமா கட்சி முஸ்லிம் சமூகத்தின் நலன் ஒன்றை வைத்தே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் மீண்டும் இணைந்ததுடன் ஜனாதிபதி மைத்ரிக்கும் ஆதரவளிக்க முன் வந்தது.
இந்த இணைவின் வெற்றிகளை சமூகம் எதிர் காலத்தில் பெறும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.