இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் உடனடியாக அவர்களது நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டும். அகதிகள் என்ற போர்வையில் முஸ்லிம்கள் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு அரசு இடமளிக்கக் கூடாது. கடலோர பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
இவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அல்லது வில்பத்துவில் குடியேறுவதற்கு வந்திருக்க வேண்டும். ரோஹிங்யா முஸ்லிம்கள். அவர்களது நாட்டிலே பௌத்தர்களுக்கு எதிராக செயற்படுபவர்கள். இவர்களைப் பற்றி அறியாது கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களை கிழக்கில் அல்லது நாட்டில் எங்காவது குடியேற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.