சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதேச முன்னாள் இளைஞர் சேவை அதிகாரியும், ஆலையடிவேம்பு இளைஞர் சேவை அதிகாரியுமான எம்.ஐ.எம் பரீட் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள Study Tour of Youth Development Active Programme பெங்களூரில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் (06) சனிக்கிழமை இந்தியா பயணமாகிறார்.
இந்த புலமைப்பரிசிலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து இவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இலங்கையிலிருந்து மொத்தமாக 12 பேர்களில், கிழக்கில் 03 பேர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.