யட்டிநுவர, தந்துர பகுதியில் முஸ்லிம் இளைஞன் ஒருவரின் சிறு நடவடிக்கையால் நேற்று முதல் சிறு பதட்ட சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் பிராந்திய டி.ஐ.ஜியின் கவனத்துக்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பொலிசார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் பிரதேசத்தின் விகாரையில் இவ்விகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் அறியமுடிகிறது.
ரமழானுடைய காலத்தில் முகநூல் பதிவூடாக இவ்வாறு சர்ச்சை உருவாகியுள்ளமையும் இளைஞர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டத்தக்கது.