தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைய முன்வர வேண்டும்..!

பாறுக் ஷிஹான்-
யாழ். மாவட்டத்தில் பெண் பொலிசார் மிக குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தமிழ் பேசும் இளைஞர்கள் யுவதிகள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலும் குறிப்பாக யாழ்.மாவட்டத்திலும் தமிழ் பேசும் பொலிசார் மிக குறைவாக காணப்படுகின்றனர். அதிலும் தமிழ் பேசும் பெண் பொலிசாரின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே காணப்படுகிறது. இதனால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு பற்றாக்குறைவாகவே தொடர்ந்து உள்ளது.

தமிழ் பொலிசாரை இணைப்பதற்கு பலதடவை நேர்முக தேர்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொலிசில் இணைவது என்பது மிக குறைவாகவே உள்ளது. எனவே வடக்கில் தமிழ் பொலிசாரின் பற்றாக்குறையை நீக்குவதற்கு தமிழ பேசும் இளைஞர் யுவதிகள் முன்வரல் வேண்டும்.

தற்போதும் தமிழ் பொலிசாரை இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள் விண்ணப்பங்களை பொலிஸ் நிலையங்களிலும் புத்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். கா.பொ.தர சாதாரண பரீட்சையில் சித்தியெய்த எவரும் இதற்கு விண்ணப் பிக்கலாம். விண்ணப்ப முடிவு திகதி யூன் 03 ஆம் திகதியாகும். ஆகவே அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -