மறிச்சிக்கட்டி பிரச்சினை மகிந்தவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு..!

ன்னார் மறிச்சிக்கட்டி பிரதேச மக்களின் காணிப்பிரச்சினைக்கு அரசாங்கம் அவசரமாக தீர்வுகண்டு, அந்த மக்கள் தமதுசொந்த இடங்களில் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பணிப்புரையை அடுத்து சத்தார் அவர்களின் தலைமையில் அந்த பிரதேசத்துக்கு தூதுக்குழுவொன்று அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டது. போராட்டம் தற்காலிகமாக முடிவடைந்ததற்கு முந்தைய நாள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தது பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிடம் அறிக்கை ஒன்றையும் குழு சமர்ப்பித்தது.

கூட்டு எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவான சிறிலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளரான சத்தார் விடுத்திருக்கும் அறிக்கையில் இது தொடர்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அந்த மக்கள் மிகவும் நொந்து போயிருக்கின்றனர். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டிலே அமைதி திரும்பியுள்ளபோதும் இதனால் தங்களுக்கு எந்த விதமான விமோசனமும் இல்லையென அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் அதாவது 2012ம் ஆண்டு வர்த்தமானி முலம் இழைக்கப்பட்ட அநீதிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் எமது அறிக்கையில் உள்ளடக்கி இருக்கின்றோம். உண்மையில் இந்த மக்கள் இந்த பிரதேசத்தில் படுகின்ற கஸ்டங்களை நாம் நேரில் கண்டோம். வாழ்வதற்கு எந்த வசதியும் இல்லாத நிலையில், தொழில் செய்ய முடியாதவாறு அவர்களது காணிகள் வேண்டுமேன்றே பறிக்கப்பட்டு இருக்கின்றன. மனச்சாட்சியுள்ள எவரும் இவ்வாறான நடவடிக்கைக்கு அனுமதியளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
எம்.இர்ஷாத்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -