பாறுக் ஷிஹான்-
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் விமானப் படையினரின் வை 08 என்ற விமானத்தின் பாகங்கள் நேற்று(9) மீட்கப்பட்டுள்ளன. இந்த விமானம் 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி வீழ்த்தப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஆனையிறவு இயக்கச்சியில் குறித்த விமானப் பாகங்கள் மீட்கப்பட்டன.
அங்கு சென்ற விமானப்படை உயர் அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டதுடன் பின்னர் விமானத்தின் பாகங்களையும் மீட்டுள்ளனர். சுமார் 25 வருடங்களின் பின்னர் குறித்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.