பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கு சீரற்ற காலநிலையிலும் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட நான்கு பொலிஸ் குழுக்களுமே இந்த தொடர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொதுபல சேனா அமைப்பு ஈடுபட்டு வந்ததுடன், ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் தெருக்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் அவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.