ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமான 11.2 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த சொத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு சொந்தமானது என கருதப்படும் தனியார் நிறுவனம் ஒன்று மோசடியான முறையில் அபகரித்துள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு நேற்று கோட்டை நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
ஊடகவியலாளர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பிலேயே பொலிஸார் நேற்று பீ அறிக்கை ஒன்றூடாக விடயத்தை கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கானது நேற்று கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, பொலிஸில் முறைப்பாடு செய்த ஊடகவியலாளர் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன மற்றும் சிராஸ் நூர்தீன் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர்.