பள்ளிவாயலில் அழுகை சத்தம் - இது கதை அல்ல உண்மை சம்பவம்

ல்லாஹ்வின் பாதையில் 4வருடத்துக்கு முன் மூன்று நாள் ஜாமாத்சென்றேன் நள்ளிரவு நேரத்தில் அதிகமாக அழுகை சத்தம் கேட்டது ஒரு சகோதரன் விம்மி அழுது , விம்மி அழுது துஆ செய்தார். அடுத்த நாளும் அது போல அழுதார் இருட்டில் சாரி இதை கேட்கவும் கூடாது கேட்கவும் வேனும் என்ற ஒரு என்னம் மனதில் தோன்றியது

ஏன் என்றால் அவருக்காக நாங்களும் துஆ செய்யலாம் என்ற நோக்கில் அவரின் அருகில் மெதுவாக சென்றோம் இரண்டு பேர் அவரிடம் பேசினோம் அதிகமாக அழுகின்றீர் சத்தமும் அதிகமாக உள்ளது. தப்பாக நினைக்க வேண்டாம் உங்களுக்கு ஏதும் பெரிய பிரச்சினையா ? சொல்லமுடியுமான பிரச்சினை என்றால் சொல்லுங்கள் நாங்களும் பிராத்திப்போம் இல்லையெனில் விடுங்கள் அல்லாஹ் உமது பிரச்சினையை தீர்த்து வைப்பான் என்றோம்.

அப்படி எதுவுமே இல்லை ஒரு சகோதரனுக்காக பிராத்திக்கின்றேன் அவர் மரணித்துவிட்டார் நான் அதிகமாக அமல் செய்வதற்கு அல்லாஹ்வின் உதவியால் அவர்தான் காரணம் என்னை சமூகத்தில் யாரும் மதிப்பதில்லை நான் குடிகாரன் ,அதிகமாக பெண்களோடு பேசுபவன் ,கெட்ட நடத்தை உள்ளவன் சிலவற்றை சொல்லமுடியாது அந்த சமயத்தில் மரணித்த சகோதரன் என்னை மூன்று நாள் ஜாமாத் போக அழைத்தார் சென்றேன்.

சென்ற நோக்கம் நல்ல நோக்கமல்ல அவருக்காக சென்றேன் அவர் பெரும் வசதி ஊரில் பெரும் புள்ளி என்பதுக்காக சென்றேன். பின்னர் 2 நாட்களில் வீட்டுக்கு ஓடிவந்தேன் அவரிடம் கூறவும் இல்லை. ஒருநாள் மீண்டும் என்னை அவர் என்னை சந்திக்க வந்தார் வெட்கத்தில் மறுகினேன் அவர் அழகாக அழைத்து என்ன முதலாளி சுகமா என்றார் ஓடிவந்த விடயத்தை கேட்பாரோ என்ற அச்சம் மனதில் வரத்தொடங்கியது.

பயத்தில் வாயிலிருந்த சிக்கிரட்டை கையால் பொத்துவிட்டேன் அவர் உடனே சுடும் கீழே போடுங்கள் இதை விட அதிகமாக செய்தவன் நான் என்றார். மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான் என்றார் இது உடல் நலத்துக்கு கேடு என்றார்.

சிலநேரம் தொழுகைக்கு அழைத்து செல்வார் என்னை அவரின் வாகனத்தில் மனதில் ஒரு மகிழ்ச்சி இவர் இந்தளவு மதிக்கின்றார். அதன் பின்னர் 40 நாட்கள் ஜாமாத் சென்றேன் பின்னர் ஒவ்வொரு அமலும் அல்லாஹ்வுக்காக செய்தேன் இன்றுவரை செய்கின்றேன் கிட்டத்தட்ட 15 வருடம் இறைபணியில் பயணிக்கின்றேன். அவர் மரணித்து 7 வருடம் சுமார் அவருக்காக 15 வருடமாக பிராத்திக்கின்றேன்.

அவருக்காகதான் அழுதேன் எனக்கு ஒரு கஷ்டமும் அல்லாஹ் தரவில்லை இன்று வந்தவர்கள் நீங்கள் பழைய ஜாமத்தினருக்கு தெரியும்பலர் கேட்பார்கள் என பதிலளித்தார். பின்னர் எமது கண்களில் கண்ணீர் ஆறு போல ஓடியது பல கோடி சம்பாதித்து கொடுத்த மரணித்தவரின் மகன் கூட தந்தைக்கு இவ்வாறு செய்து இருப்பாரா என்றால் நிச்சயம் கேள்விக்குறிதான்.

இவர் சொத்தை எழுதி கொடுக்க வில்லை அல்லாஹ்வின் பாதையில் எவ்வாறு செலவு செய்யவேண்டும் நேரான வழியையும் காட்டி கொடுத்தார் இன்று அவருக்காக ஒரு சகோதரன் அழுது பிராதிக்கின்றான் அது போல நாங்களும் அமல்களை செய்து அடுத்தவர்களுக்கும் நேரான வழிகளை காட்டி நன்மைகளை அடைந்துகொள்வோம்.
இந்த சம்பவத்தை என்னிடம் ஒருவர் கூறினார் அதை எழுத்து வடிவில் எழுதினேன்..
ஸபா ரௌஸ் கரீம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -