நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் மீனவர்களின் இயந்திரப் படகுகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக சுனாமி தாக்கத்தின் பின்னர் 2005ம், ஆண்டு காலப்பகுதியில் மீனவர் பயனுக்கா கட்டப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையமான இதுவரை காலமும் இயங்காமல் யாருக்கும் பயனற்று கிடக்கின்றது.
இது தொடர்பாக அப்பிரதேசத்து மீனவர்கள் கூறுகையில் இந்த எரிபொருள் நிரப்பும் நிலையமானது சுனாமி தாக்கம் ஏற்பட்டதன் பின்னர் மீனவர்களுக்காக "எஞ்சியோ" நிறுவனம் கட்டியது இதில் இதுவரை காலமும் மீனவர்கள் யாரும் பயன்பெற வில்லை எமது படகு இயந்திரங்களுக்கு அவசர தேவைக்காக எரிபொருள் நிரப்புவதற்கு நாங்கள் தூரச் சென்று வரவேண்டியுள்ளது இன்நிலையில் எமது கண்முன்னே இப்படியொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தை வைத்துக்கொண்டு நாங்கள் எரிபொருளுக்கா தூரச் சென்று வருவது கடும் வேதனைக்குரிய விடையமாகவுள்ளது.
ஆகவே நிந்தவூர்-3ம், பிரிவு கடற்கரையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தை மீனவர்களான எமக்கு பயன் தரக்கூடியதாக அமைத்துத் தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக கூறுகின்றனர்.