க.கிஷாந்தன்-
மலையக மக்கள் நடந்து வந்த பாதை வேறு தற்போது நடக்கின்ற பாதை வேறு எதிர்காலத்தில் நமது இருப்புரிமை இடங்களை பிடுங்கி கொண்டு நம் மக்களை நற்றாட்டில் விடும் சந்தர்ப்பம் உருவாகி வருகின்றது. அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இ.தொ.கா வின் மேதினம் கினிகத்தேனை நகரில் பிரதான பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாதவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் மனதை வென்றது என்பதை மீண்டும் ஒருமுறை இந்த மேதின கூட்டத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.
நமது அழைப்பை ஏற்று அரசாங்கத்திலிருந்து வருகைதந்திருந்த இரண்டு அமைச்சர்களும் இங்கு ஆற்றிய உரையினை அடுத்து அவ்வுரையில் சொல்லப்பட்ட விடயங்கள் பளிக்குமேயானால் எதிர்கால மலையகம் உண்மையில் சுபீட்சமடையும் என்பதை அவர் தெரிவித்தார்.
ஒற்றுமை என்பது எமது மக்களுக்கு அவசியமான ஒன்றாக அமைகின்றது. இந்த ஒற்றுமை பலப்படும் பட்சத்தில் நாம் சுபீட்சமாக வாழும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.