மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ் வீதிகளை அழகு படுத்தும் விஷேட திட்டத்திற் கமைவாக தற்போதைய இராஜாங்க அமைச்சரும் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மத்திய கிழக்கு அரபு நாடுகள் போன்று மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே சுமார் 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீத்த மரங்களிலுள்ள பேரீத்தம் பழங்கள் பூத்தும் காய்த்தும், பழமாகியும் காணப்படுகின்றது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான பேரீத்தம் பழங்கள் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.