இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைக்கு நிருவாகத் தெரிவு





ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

லங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைக்கு நிருவாகத் தெரிவு சனிக்கிழமை (27.05.2017) மட்டக்களப்பு மன்றேசா வீதியிலுள்ள அச்சங்கத்தின் மாவட்டத் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பொதுச் சபைக் கூட்டத்திலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான நிருவாக சபைத் தெரிவிலும் மாவட்டத்தின் 5 பிரிவுகளிலும் இயங்குகின்ற செஞ்சிலுவைச் சங்க அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த இரு வருட காலத்துக்கான பொதுச் சபை அறிக்கை, 2015 ஆம் 2016 ஆம் ஆண்டுகளுக்கான கிளைச் செயலாளர், மற்றும் கிளைக் குழு அறிக்கை, கணக்கறிக்கை, 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு பிரேரணைகள், போன்றன சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், அடுத்து வருகின்ற 4 ஆண்டுகளுக்கான பரிபாலனத்திற்கு புதிய நிருவாகம் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டது.

தலைவராக ஓய்வு பெற்ற ஆசிரியரும், சமூக சேவையாளருமான தம்பிப்போடி வசந்தராசா மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக பாடசாலை அதிபர் சா. மதிசுதன், பொருளாளராக ஊடகவியாலளரும், சமூக சேவையாளருமான வடிவேல் சக்திவேல் உபதலைவராக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பின்னர் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றது. இதன்போது கே. இராசரெத்தினம், கே. நவநாதன், ரீ. சிவபாதம், எம். கலாவதி, எஸ். கணேசலிங்கம், ஜே. நிஸாந்தினி ஆகியோர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -