ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் 226/L கிராம உத்தியோகத்தர் பிரிவைக் கொண்ட மஹருப் கிராம மக்கள் பல வருட காலமாக ஒரு பகுதியினர் குடி நீர் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுடன் வாழ்வதாக கவலை தெரிவிக்கின்றனர். இப் பகுதி உயரமான மலைப்பாங்கான பகுதியாகவும் ஓரளவு காணப்பட்டாலும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்தாங்கியும் காணப்படுகின்ற போதிலும் ஒரு பகுதியினருக்கு பிரதான குழாய் ஊடாக அப்பகுதிக்கு வழங்கப்படவில்லை. 1984 ல் ஒரு மாதிரிக் கிராமமாக முன்னால் மர்ஹூம் அமைச்சரான எம்.ஈ.எச்.மஹ்ரூபினால் இக்கிராம குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றதாக ஆய்வுகள் நிரூபனம் செய்கிறது. 977 குடும்பங்களைச்சேர்ந்த 3502 அங்கத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்கள்.
இக்கிராம சேவகர் பிரிவில் கச்சக்கொடித்தீவு, பொன்னாரந்தீவு, புதுக்குடியிருப்பு, கெலுத்தி ஓடை, மஹமாரு ,சின்ன மஹமாரு போன்ற கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. பிரதான தொழிலாக விவசாயம், மீன்பிடி செங்கல் உற்பத்தி போன்றன காணப்படுகின்றமையும் கூலித்தொழில் மூலமாக அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் மக்களாக தமதுஜீவனோயபாயத்தை கழித்து வருகின்றனர்கள். சமுர்த்தி பெறுவோர்கள் 412 ,விதவைகள் போன்றன காணப்பட்டாளும் கூட குடிநீர் இல்லாமல் 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. இவர்களில் சின்ன மஹமாரு பகுதியில் குழாய் நீர் வழங்கல் திட்டம் மேற்கொள்ளப்படாமை குறித்தும் மக்கள் மிக நீண்ட தூரம் சென்று குடிநீருக்காக அருகாமையில் உள்ள கிராமத்தை நோக்கி சுமந்து வருவதாகவும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இக்கிராமம் கடந்த அரசினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. குடிநுருக்காய் பல முறை சம்பந்தப்பட்டவர்களையும் நாங்கள் வாக்களித்த மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து பிரச்சினைகளை முன்வைத்தோம் தேர்தல் காலங்களில் வீட்டுக்கு கிராமத்தில் மேடை போட்டு பேசியதிலும் வாக்குகளை சுவீகரிக்கவந்தவர்கள் ஏன் தங்களுக்கான குடிநீர் வசதிகளை இதுவரைக்கும் செய்து கொடுக்கவில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டு நிற்கின்றனர்.
காலம் காலமாக தேர்தல்களில் வெற்றியடைவதுற்கு முன் குறிக்கோள்களுக்கு குறிவைத்து இன்று வரைக்கும் கிண்ணியாவில் மூன்று மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் குடிநீர் பிரச்சினை தீராமலிருப்பது எந்தளவுக்கு நியாயமானதாகும்.அன்றாடம் தற்போது அதிக வெப்பநிலையில் கூலித்தொழிலில் கஷ்டங்களுடன் வாழுகின்றபோதிலும் இதுவரையும் எவ்விதமாதிகுடிநீருக்கான திட்டங்களை மேற்கொள்ளாமையும் பொருளாதார கஷ்டங்களை சுமக்கின்ற போதிலும் வாய்மூடியாகவும் தங்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அம்மக்கள் துரித நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்கள்.சிலருக்கு வீட்டுப் பிரச்சினை மலசலகூட வசதியிமை குடிசைகளில் வாழ்க்கை என இன்னோரன்ன கிராமத்து வாழ்க்கையினை அனுபவித்து வரும் மக்கள் இக்கிராமத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட முன்வருமாறும் மஹரூப் கிராமமக்கள் கோரிக்கையிடுகின்றனர்.