க.கிஷாந்தன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் சவுத் மடக்கும்புர ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 01.05.2017 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்று பகுதியில் 01.05.2017 அன்று மதியம் குறித்த இளைஞன் 3 நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். அகப்பட்ட குறித்த இளைஞன் ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து 02.05.2017 அன்று காலை 10.30 மணியளவில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், திம்புள்ள பத்தனை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர். திம்புள்ள மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான தியாகராஜ் வினோதன்எ ன்பவரே உயிரிழந்தவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளின் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.