பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமையில் குறுக்கிட்டமை, இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழேயே, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் கூறியது.
அவரைக் கைது செய்வதற்காக, நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டை விட்டு அவர் தப்பிச் செல்லமுடியாத வகையில், தடையுத்தரவொன்றை நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தலைமையகம் கூறியது.
TM