பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்ட தேசிய மீலாத் விழா குழுவில் தனது பெயரை இணைப்பது குறித்து எவரும் தன்னுடன் கலந்துரையாடவில்லை எனவும் இந்த விடயம் சம்பந்தமான அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருப்பதாக யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளைத் தலைவர் பி.ஸ்.எம் சுபியான் மௌலவி தெரிவித்துள்ளார்.
தற்போது இணைய ஊடகமொன்றில் தனது பெயர் யாழ் மாவட்ட தேசிய விழா குழுவில் உள்வாங்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ஆட்சேபனை தெரிவித்த அவர் குறித்த குழுவின் உண்மைத்தன்மை குறித்து முஸ்லீம் சமய விவகார அமைச்சு மக்களுக்கு தெளிவு ஒன்றை வழங்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.