பாறுக் ஷிஹான்-
புத்தளம் - சிரம்பியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று(5) அதிகாலை இடம்பெற்றதுடன் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் வண்டியும் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நான்கு பேரில் மூவர் புத்தளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 40 வயதான செல்வராசா ராஜராஜன் கெப் வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தொகை மதீப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தின் ஊழியர்கள் பயணித்த கெப் வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.