க.கிஷாந்தன்-
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் 08.05.2017 அன்று கண்டி ஆளுநர் அலுவலகத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் அனுசா சிவராஜா அவர்களின் பின் கடந்த அரசாங்த்தினால் இல்லாது ஆக்கப்பட்டது. அதனால் தமிழ் மொழிமூல பாடசாலைகள் அபிவிருத்திக்காக ஒதுக்கி வந்த நிதி ஒதுக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் இக்கல்வி அமைச்சினை வழங்குவதில் இழுபறி நிலை காணப்பட்டன.
அதனை தொடர்ந்து கல்விக்கு பொறுப்பாக மத்திய மாகாண விவசாய, கால்நடை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் முழுமையாக அந்த அமைச்சு வழங்கப்படவில்லை. இதனால் தமிழ் மொழிமூல பாடசாலைகளின் பிரச்சினை தீர்ப்பதில் சிக்கல் நிலையே நீடித்திருந்தன.
அதனை தொடர்ந்தே மத்திய மாகாண கல்வி அமைச்சு மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் அமைச்சரான மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.