கொழும்பு நகரில் கலைத்துறையில் ஆர்வமுள்ள கலைஞர்களுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு சந்தர்ப்பங்களை கொடுத்துவரும் திறமை குழுவினரின் நான்காவது படைப்பான " குற்றம் உன்னை துரத்தும் " குறும் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.இஸ்டீபன் கொட்வினின் இயக்கத்திலும், சனாத்தன சர்மா , பிரசாந்த் , கார்த்தி கார்த்தீபன் , ஜீவன் ரோசன் , ரோய், பிரகாஸ் , பிரதீப் , ரிப்கான் கேபி ஆகியோரின் நடிப்பிலும் வெளிவரவுள்ள இத்திரைப்படத்திற்கு நபீஸ் இசையமைத்ததுடன் ரேமானந்த் அஜய் ஒளிப்பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவ்வாறான திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நாமும் ஊக்கப்படுத்துவோம்.