மூவின மக்கள் வாழுகின்ற மிக அழகான இந்து சமுத்திரத்தின் முத்து எனவும், பண்டைய காலத்து பட்டு பாதையின் மையமாகவும் திகழ்ந்த உலக அரங்கை ஈர்த்த ஒரு தேசமாகும். இது கடந்த பல ஆண்டுகளாக யுத்தத்தின் கோர வடுக்களில் சிக்கி இருந்தாலும் வரலாற்றில் அந்த யுத்தம் மகிந்த ராஜபக்ச எனும் ஆட்சியாளரால் நிறைவடைகின்றது. அதை நிறைவு செய்ய வேண்டிய தேவை அதை உருவாக்கிய நாடுகளுக்கு தேவையான போதே அது நிறைவடைந்தது.
இதே போன்று 2002ம் மாண்டு சமாதான ஒப்பந்தம் ஏற்பட ஏற்கனவே திட்டமிட்ட சர்வதேசம் மறைந்த மு.கா வின் தலைவர் அஷ்ரப் அதற்க்கு தடையாக இருப்பார் என உணர்ந்து திட்டமிட்டு 2000ஆண்டே படு கொலை செய்ததை நினைவில் கொள்க. ஆனால் நாட்டை நிர்வாகித்த மகிந்த ராஜபக்ச தனது வெளியுறவு கொள்கையில் கொண்டு வந்த மாற்றமே இலங்கை தீவின் மீது இன்று தோன்றி இருக்கும் மாற்றங்களுக்கான காரணமாகும்.
இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்ச யுத்தம் நிறைவடைந்த கையோடு அவரை வீழ்த்தி விட வேண்டு மென 2010ஆண்டு சரத் பொன்சேகா வை உள் வாங்கி வேட்பாளராக போட்டியிட வைத்த போது அந்த கூட்டில் அங்கம் வகித்த ஐ.தே.கட்சி,உள்ளிட்ட அணி தோல்வியை தழுவினாலும் அதன் வடிவமைப்பாளர்களான அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசம் தனது பார்வையை மிக கவனமாக செலுத்தி இருந்தது.
அதன் காரணமாக மிக கவனமாக ஆட்சியின் ஆரம்பத்தில் விஜயதாச ராஜபக்ச என்கின்ற பா.உ மகிந்த ராஜபக்ச உடன் இருந்து ரணிலுடய தரப்புக்கு மாறுகிறார். மகிந்த அரசுக்கு எதிரான பகையாளர்கள் எல்லோரும் ஓரணியில் வரிசைப்படுத்த படுகிறார்கள் ரணில், சந்திரிகா சரத்பொன்சேகா என ஒன்று திரட்டப்பட்ட அணி யுத்தத்தை நிறைவு செய்த தமிழ் தேசிய விரோதி மகிந்த ராஜபக்ச எதிராக நாடு கடந்த தமிழீழம், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன உள்வாங்கப்படுகின்றன.
ஆட்சி மாற்றத்துக்கு இவ்வாறான பலம் போதாது என உணர்ந்த சர்வதேசமும் இந்த கூட்டுக்களும் மேலும் பலரை உள்ளீர்ப்பு செய்யவும் தயாராகியது. ஜனாதிபதி கனவுடன் மகிந்த அரசில் இருந்த சம்பிக ரணவக, ராஜித சேனாரத்ன, போன்றோர் விசேட திட்டமிடலுக்காக உள்வாங்கப்பட்டும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக அவர்களினால் மைதிரி பால சிறி சேன அவர்களும் உள்ளீர்க்கப்படுகிறார்கள்.
பொதுபல சேனா ஆரம்பம்
ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்து மகிந்த ராஜபக்ச வால் தூரமாக்கப்பட்ட டிலந்த விதானகே என்பவர் சம்பிக்க ரணவக்க என்பவரால் உருவாக்கப்பட்ட பாத்திரமான ஞானசாரதேரரை வைத்து பொதுபல சேனா எனும் அமைப்பை உருவாக்குகிறார். அந்த அமைப்பு பெளத்ததை பாதுகாக்க போகிறது எனவும் பெளத்த வாக்குகள் எம்மோடு இருக்க நிரந்தர வழி இதுதான் எனவும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் அறிவுறுத்தல் கிடைக்கின்றது.
அழுத்கம பேருவளை சம்பவம்
நன்கு திட்டமிடப்பட்ட இந்த வன்முறையின் பின்னால் சம்பிக ரணவக்க போன்றோர் இருந்தார்கள் அதிலும் முஸ்லீம்களை பாதுகாப்பேன் என வேசம் தரித்த ராஜித சேனாரத்ன வெளிநாடு சென்றிருந்தார் என்பதும் அவர் வந்த பின் முஸ்லீம் மக்களை பாதுகாக்க வேண்டும் என கூவியதும் இப்போது அவர் மெளனம் காப்பதும் அந்த திட்டமிடலின் பின் அவரும் இருந்திருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.
அந்த அழிவின் பின்னர் மகிந்த ராஜபக்ச விடம் ஞானசார தேரரை கைது செய்ய பல முஸ்லீம் அமைச்சர்கள் கோரிய போதும் உள்ளே அமைச்சராக இருந்த சம்பிகரணவக்க சுமார் ஆறு லட்சம் சிங்கள வாக்கு பலத்துடன் அவரை கைது செய்ய கூடாது என விடாப்படியாக இருந்தார்.
மகிந்தவின் அரசியலுக்கு முஸ்லீம்கள் ஒரு போதும் செவி சாய்க்க வில்லை என்பதும் வடக்கு கிழக்கு மாகாணத்திற்க்கு வெளியே உளளவர்கள் ஐ.தே.கட்சி க்கு பெருவாரியான ஆதரவாளர்களாகவும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களில் அதாஉல்லா, ஹிஸ்புல்லாஹ் அதரவாளர்களை தவிர ஏனையோர் மகிந்த ராஜபக்கசவுக்கு எதிரானவர்களாகவுமே அனைத்து தேர்தலகளிலும் இருந்தனர்.
சம்பிக ரணவக்கவின் சூழ்ச்சி புரியாத மகிந்த
இனவாதம் எனும் கத்தி தன்மீது ஏற்றப்பட்டிருப்பதை உணர்ந்தாலும் வெளியே எடுத்தாலும் மரணம், உள்ளே வைத்திருந்தாலும் மரணம் எனும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஜோதிடம் மீது நம்பிக்கை கொண்ட மகிந்த தேர்தலை அறிவித்த கையோடு உள்ளிருந்த அணைத்து துரோகிகளும் வெளியேறினர். அதனோடு சேர்த்து ஏற்கனவே வெறுப்புக்குள்ளாயிருக்கும் முஸ்லீமகளை திருப்தி படுத்தவும் பணத்துக்காகவும் மு.கா. கட்சியும் நாமல் ராஜபக்சவுடன் கொண்ட வெறுப்பில் அ.இ.ம.கா கட்சியும் பொது எதிரணியில் இணைந்து நல்லாட்சியின் பங்காளர்களாகினர்.
அதாஉல்லா ஹிஸ்புல்லாஹ் போன்றோர் இந்த விடயத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தப் போய் மக்களால் நிராகரிக்கப்படுகிறார்கள்.
நல்லாட்சியில் நடப்பவை
ஞானசார தேரரின் அட்டகாசம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. சம்பிக ரணவக்க விஜயதாச ராஜபக்கச போன்றோர் பகிரங்கமாக ஆதரவளிக்கின்றனர்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் மெளனம் காக்கின்றனர். முஸ்லீம் தலைவர்கள் தங்களது பதவிகளை தக்க வைத்து கொள்ள பிரச்சினைகளை ஊதுவதும் அணைப்பதாகவும் இருக்கிறார்கள்.
ஏன் ஞானசார மீண்டும் தன்னை வெளியே கொண்டு வந்திருக்கிறார் எனும் காரணங்கள் வெகுவாக உணரப் படுகிறது.
இந்த ஆட்சியில் இடம் பெறும் வர்த்தக நடவடிககையால் முஸ்லீம் வர்த்தகர்கள் வெகுவாக பாதிபபுற்ற சூழலில் ஞானசரவை வெளியே கொண்டு வந்து அடைப்பதன் மூலம் ஓர் நிம்மதி பெரு மூச்சை அவர்களை உணரச் செய்வது, சிங்கள முஸ்லீம் வெறுப்பூட்லின் பின்னால் வடக்கு கிழக்கு முஸ்லீம்களை சர்வதேச அஜன்டாவின் பிரகாரம் வடக்கு கிழக்கு இணைப்புக்கு துணையாக்குதல், அவர்களை அடிமைப்படுத்தல்.
இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் பின்னால் முஸ்லீம் விரோத போக்குடைய மோடி தலைமையிலான இந்தியா இருக்கிறது என்பது நிதர்சனமாகும்.
ஆக நாம் உணர்வுகளுக்குட்பட்ட சமுகமாகவும் எம்மை அவர்களின் தேவைக்கு பயன்படுத்திய தலைவர்கள் தொடர்பாகவும் நாம் இன்னமும் உணர்ந்து கொள்ள வில்லை. அன்று துள்ளிக் குதித்த ஆசாத் சாலி போன்ற அரை குடங்கள் இன்று அமைதி காக்க கோருவதும் நீங்கள் இது வரை புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அறிவாந்த ரீதியாக உணர்வுகளுக்கு இடம் கொடுக்காத சமுகமாக நகர்வதே முஸ்லீம் சமுகத்தின் இன்றைய தேவை.