அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை . மல்லிகைத்தீவு பெருவௌி எனும் கிராமத்தில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குற்படுத்தப்பட்டதாக கூறி இரண்டு சந்தேக நபர்களை அன்றைய தினமே மூதூர் பொலிஸார் கைது செய்தனர். இவ்வாறான சூழ்நிலையில் குறித்த பகுதியில் கட்டட நிர்மாணமொன்றினை மேற்கொண்டு வந்த மற்றும் இருவர் அவ்விடத்திற்கு சென்ற போது அங்கிருந்த சிலரால் தடுத்து வீட்டுக்காவலில் வைத்திருந்தனர்.
இத்தகவல் மூதூர் பொலிஸாருக்கு கிடைத்தவுடவும் மூதூர் பொலிஸாரும் மாகாண சபை உறுப்பினரான ஜே.எம்.லாஹிரும் இணைந்து திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரோடு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதையடுத்து உடனடியாக சகல பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இரவு 8.30 மணிவரையும் தடுத்து வைத்திருந்த நபர்களை விடுவிக்க முடியாமல் போனது.
இச்சந்தர்ப்பத்தில் மல்லிகைத்தீவு சந்தியில் தோப்பூர் பொதுமக்கள் எல்லோரும் உன்று கூடியிருந்தனர். இத்தருனத்தில் நோன்பை கூட திறக்க முடியாத நிலையில் பதற்றமான சூழல் நிலவியது. இதே வேளை மாகாண சபை உறுப்பினர் அவ்விடத்தில் நின்று பொதுமக்களை அமைதி காக்குமாறு வேண்டியதற்கிணங்க பொதுமக்கள் மிகவும் அமைதி காத்து நின்றனர்.
இத்தருணத்தில் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் கோயில் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு தடுத்து வைக்கப்ட்டுள்ள இருவரையும் விடுவிப்பது சம்மந்தமாக பேசிய போது நாங்களும் அவ்விடத்திற்கு வருவதாக வாக்குறுதியளித்தாகவும் இரு பக்கதினரும் பேசுவோம் என கூறினர்.
இதற்கிணங்க மல்லிகைதீவு சந்தியில் மாகாண சபை உறுப்பினரான தலைமையில் மூதூர் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் கோயில் நிர்வாகத்தினரும்.பள்ளி வாசல் நிர்வாகத்தினரும் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் கோயில் நிர்வாகத்தினர் பொலிஸ் நிலைய வாகனத்தில் கங்குவேலி சென்று தடுத்து வைத்திருந்த நபர்களை பொலிஸரிடம் கையளித்தனர்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் சிறார்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் கொடுத்துக்ெகாண்டிருப்பதை நேரில் சென்று பார்த்தேன். இதுவிடயத்தினை பாராளமன்ற உறுப்பினர் கே.துறைரெட்ணசிங்கம். கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் நாகேஸசவரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அதனையடுத்து மூதூர் பொலிஸாரினால் சிறார்களை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். சந்தேக நபர்களை கைது செய்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளனர். இதுவே உண்மைச்சம்பவமே தவிர முகநூல்களில் முஸ்லிம் தமிழ் கலவரங்களை உண்டாக்குவதற்காக சில தீய சக்திகள் இன குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் தமிழ் கலவரத்தினை உண்டாக்குவதற்காக கற்பழிக்கப்ட்டு கொலை செய்யப்பட்ட படங்களை போட்டு மக்களை பிழையாக வழி நடாத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
எனவெ அன்பாரந்த தமிழ் முஸ்லிம் சகோதர்களே இதில் யாரும் இனத்தகராறு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.