டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் நடைபேரணி..!

எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் நடாத்திய டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் நடைபேரணி நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச சபைகளின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. 

இவ்விழிப்பூட்டும் நடைபேரணியானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையிலிருந்து ஆரம்பமாகி கோறளைப்பற்று பிரதேச சபை வரை சென்றது. 

இவ்டெங்கு டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் நடைபேரணி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் ஷிப்லி பாறுக், ஜீ. கிருஸ்ணப்பிள்ளை, இ. நித்தியானந்தம், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் கல்விப் பணிப்பாளர் பொன் செல்வநாயகம் மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதேச சபைகளின் செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பொறுப்பதிகாரிகள், முன்பள்ளி பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகள் மற்றும் பொலிசார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -