திருகோணமலையில் இன்று பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதேவேளை திருகோணமலை ஹொரவப்பொத்தான ரொடவ பிரதான வீதியின் மருங்கே இருந்த மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிலைமை இஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார் .
குறித்த வீதியால் பயணித்த கிழக்குமாகான சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் இப்பாதையிநூடாக பயணித்த பிரயாணிகள் பலரும் பயணத்தினை தொடர முடியாமல் பாதையில் காத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார் .
பாதையில் சரிந்து கிடக்கும் மரத்தினை அகற்றும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.