முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சால்வையினாலேயே அவரை தூக்கிலிட வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூட்டு எதிரணியின் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் உதேனி அதுகோரல தெரிவித்தார்.
கூட்டு எதிரணியின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் அதன் செயற்பாடுகளை போலியாக விமர்சிக்கின்ற அரசாங்கத்தில் வெறுமனே குருடர்களும் செவிடர்களும் மாத்திரமே நிறைந்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கூட்டு எதரிணின் பத்தரமுல்லை நெலும் மாவத்தை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.