ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கம் ஆகிவற்றின் தொழிலாளர்கள் இன்று காத்தான்குடி பிரதான வீதியில் தொழிலாளர்களின் மகத்துவம், முக்கியத்துவம், கோரிக்கைகள் என்பவற்றை மைய்யமாகக் கொண்ட ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இவ் தொழிலாளர்களின் ஊர்வலத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரகுமான், காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவர் K.L.பரீட் (JP), காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முச்சக்கர வண்டி சாரதிகள், தொழிலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.