க.கிஷாந்தன்-
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் செனன் தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 6 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் வீடும் பகுதியளவு சேதமாகி 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26.05.2017 அன்று பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் குறித்த வீட்டில் உரிமையாளர்கள் சுய தொழிலுக்காக 20 கோழிகளை வளர்த்துள்ளனர். மண்மேடு சரிந்து விழுந்த வீட்டின் பின்பகுதியில் இந்த கோழிகள் பட்டிகள் ஊடாக வளர்க்கப்பட்டுள்ளது.
அப்பட்டியின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் கோழிகளில் 6 கோழிகள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளது.அதேவேளை அந்த வீட்டின் பகுதியளவு சேதமடைந்திருப்பதால் அவ்வீட்டில் வசிக்கும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரிந்து விழுந்த மண்மேட்டை அகற்றும் பணியில் வீட்டார்கள் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.