கிழக்கு முதலமைச்சர் மீது சேறு பூச முயன்று தம்மீதே சேறு பூசிக் கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சுபைர் அவர்கள் இன்றுமுதலமைச்சரின் ஊடகப் பிரிவுக்கு அவதூறு கூறுமளவுக்கு தாழ்ந்துள்ளமை குறித்து முதலில் நாம்வெட்கப்படுகின்றோம்,
முதலமைச்சரின் ஊடகப்பிரிவினரின் பணியானது அவரின் சந்திப்புக்கள்,அவரின் உரைகள் , அவரின் அபிவிருத்திகள் மற்றும் அவரது சேவைகள் தொடர்பில் மக்களை தௌிவூட்டுவது மற்றும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு அனுப்புவதாகும்.
அதற்கு மாற்றமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைருடைய செய்திகளை பிரசுரிப்பதோ அவரது செய்திகளை எழுதுவதோ எங்கள் பணியுமல்ல நாம் அவரது ஊடகப்பிரிவுமல்ல என்பதை சுபைர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏறாவூரின் ரஹுமானியா பாடசாலை விவகாரத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைரினை இணைத்து நாம் செய்தி வௌியிட்டதாக அவரது அறிக்கையொன்றை வாசிக்கக் கிடைத்தது,
அந்த செய்தியினை கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவுதான் அனுப்பியது என்பதற்கு சுபைர் அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அற்பத்தனமானவை என்பதுடன் அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையையும் காட்டி நிற்கின்றது.
முதலமைச்சரின் ஊடகப்பிரிவில் பணியாற்றும் ஒருவர் பங்குதாரராய் இருக்கின்ற இணையத்தளத்தில் குறித்த செய்தி வந்தது என்பதற்காய் முதலமைச்சரின் ஊடகப்பிரிவுதான் குறித்த செய்தியை அனுப்பியது என்று தர்க்கிக்கும் மாகாண சபை உறுப்பினர் சுபைரின் அறிவின் ஆழத்தை நகைக்காமல் இருக்க முடியாது,
அத்துடன் குறித்த இணையத்தளத்தின் நிர்வாகிகளாக பலர் இருக்க அதில் பங்குதாரராக இருக்கும் ஒருவரை மையப்படுத்தி அதனை கிழக்கு முதலமைச்சர் சார்ந்த இணையத்தளம் எனக் கூறுவது எந்தளவுக்கு பொருந்தும்,அவ்வாறானால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களில் அரசியல் துறையில் இருக்கின்றார் ,அவருக்கென தனிப்பட்ட வர்த்தகங்களும் இருக்கின்றன,எனவே சுபைர் அவர்களின் வாதப்படி அவர் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது வியாபாரத்தில் லாபமீட்டுகின்றார் என நாம் கூற முடியும்.
அது மாத்திரமன்றி குறித்த செய்தி அதை அனுப்பிய செய்தியாளரின் பெயருடனே பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் அந்த செய்தி பெரும்பாலான இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வௌிவந்திருந்தன,அவ்வாறானால் அந்த அனைத்து ஊடகங்களும் கிழக்கு முதலமைச்சருக்கு சொந்தமான ஊடகங்களா?இல்லை,அவ்வாறானால் சுபைர் அவர்கள் ஏன் குறித்த செய்தியாளரை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டவில்லை.அது குறித்த சந்தேகமும் தோன்றுகின்றது,மாகாண சபை உறுப்பினர் சுபைரே ஒரு செய்தியாளருக்கு குறித்த செய்தியை கொடுத்து விட்டு விமர்சனங்கள் வரும் போது அதனை முதலமைச்சர் மீது சாட முயல்கின்றாரா என்ற சந்தேகமும் எழுகின்றது.
ஏன் என்றால் சுபைர் அவர் தங்களுடைய அறிக்கையில் தாம் ஏறாவூர் ரகுமானியா பாடசாலைப் பிரச்சினையைத் தீர்க்க தலையிட்டதாக கூறியுள்ளார்,அவர் தலையிட்டு அதிபர் இடமாற்ற நடவடிக்கையை ஏன் முடிவாக எடுத்திருக்கக் கூடாது,அதையே செய்தியாக பிரசுரித்து விட்டு அதன் விமர்சனங்களைக் கண்டுஅவர் கதையை மாற்றிக் கூறுகின்றார் என்றும் கூறலாம்,
அது மாத்திரமன்றி முதலமைச்சரின் ஊடகப் பிரிவில் பணியாற்றுபவருடைய இணையத்தளம் என கௌரவ மாகாண சபை உறுப்பினர் சுபைர் குறிப்பிடும் இணையத்தளத்தில் அவர் முதலமைச்சருக்கு எதிராக எழுதிய அறிக்கைகளும் பிரசுரமாகியுள்ளன,அவ்வாறாயின் அப்போதெல்லாம் குறித்த இணையத்தளம் சுபைருக்கு சார்பான இணையத்தளமா???
ஆகவே முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும் வேலையை மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்கள் விட வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.ஏறாவூரில் முதலமைச்சருக்கு எதிராக அதிகரித்துவரும் எதிர்ப்பை திசை திருப்பவே இந்த செய்தி என கௌரவ மாகாண சபை உறுப்பினர் சுபைர் குறிப்பிட்டிருந்தார்,
ஏறாவூருக்கு போய்ப்பார்த்தால் யாருக்கு அங்கு எதிர்ப்புள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். 200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட அபிவிருத்திப் பணிகளை ஏறாவூர் மண்ணுக்கு செய்த முதலமைச்சரையா மக்கள் ஏசுவார்கள் இல்லை தமது வீட்டு சுவற்றுக்குள் நான்கு போஸ்டர்களை ஒட்டி விட்டு முதலமைச்சருக்கு ஊருக்குள் எதிர்ப்பு எனக் காட்ட முயலும் நயவஞ்சகர்களையா மக்கள் ஏசுவார்கள் என்பதை சாதாரண அறிவைக் கொண்ட மக்கள் புரிந்து கொள்வார்கள்.
வெறும் வார்த்தைகளால் வானளக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைருக்கு உருப்படியாக ஏறாவூர் மக்களுக்கு செய்த 5 சேவைகளை பட்டியலிட்டுக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.
மாகாண அமைச்சுப் பொறுப்புக்களை தம் கைவசம் வைத்திருந்தும் தமது ஊருக்கு சேவை செய்ய முடியாத மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்கள் எதற்கெடுத்தாலும் முதலமைச்சரைச் சாடுவது தமது கையாலாகாத தன்மையின் வௌிப்பாடேயன்றி வேறில்லை.
அது மாத்திரமன்றி முதலமைச்சர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடமாற்றங்களை செய்திருப்பதாகவும் அதனை தாம் ஆளுனரின் உதவியுடன் இடைநிறுத்தியாகவும் கூறியதை பத்திரிகைகளில் அவதானிக்க முடிந்தது,பின்னர் அவ்வாறு முதலமைச்சரால் எவ்வித இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,இடமாற்றங்கள் ரத்து செய்யப்பட்டன என பிரசுரிக்கப்பட்ட செய்தி பொய்யானது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம் ரீ நிசாம் கூறியமை கொட்டை எழுத்துக்களில் ஊடகங்கள் வௌிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே இதன் மூலம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைரின் தரத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியும். மற்றையவர் விமர்சிப்பதால் மாத்திரம் நீ்ங்கள் அரசியல்வாதியாகிவிட முடியாது,முதலில் முதலமைச்சரைப் பார்த்து மக்கள் சேவை என்றால் என்ன,அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொள்ளுமாறு இந்த நாட்டின் எதிர்கால நலனில் அக்கறை கொண்ட பிரஜைகளாக மாகாண சுபைர் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்,
அதிமேதகு ஜனாதிபதி நீங்கள் மற்றையவர் மீது அவதூறுகளை முன்வைக்கவும் போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக உங்களை நியமிக்கவில்லை,மக்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே உங்களை அமைப்பாளராய் நியமித்துள்ளார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
மக்களும் நீங்கள் கூறும் அவதூறுகளை எதிர்ப்பார்க்கவில்லை உங்களிடமிருந்து அபிவிருத்திப் பணிகளையே எதிர்ப்பார்க்கின்றார்கள் என்பதை உணர்ந்து நடந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம்,
இப்படிக்கு
கிழக்கு முதலமைச்சரின் ஊடகப்பிரிவு