அன்று முஸ்லிம் காங்கிரஸ் என்ற நாமத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை ஒரு குடையின் கீழ் அஸ்ரப் அவர்கள் கொண்டுவர உதவியிருந்தாலும், மறுபக்கத்தில் முஸ்லிம்களுக்கு தனித்துவமாக குரல் கொடுத்து உரிமையை பெறமுயன்ற போதும் , முஸ்லிம் என்ற நாமம் அதற்கு தடைக்கல்லாகவே இருந்தது. அஸ்ரப் அவர்கள் எந்தக்காரியத்தை முன்னெடுத்தாலும் அதனை பெரும்பாண்மை இனவாதிகள் வேறு கண்கொண்டே பார்த்தது மட்டுமல்ல, பல வழிகளிலும் அவருடைய நல்ல திட்டங்களை கூட இனவாத சாயம் பூசி முடக்கவும் முற்பட்டனர்.
இந்த விடயங்கள் அனைத்தும் அஸ்ரப் அவர்களை பாதித்தே வந்தது, முஸ்லிம் காங்கிரஸ் என்ற நாமம் முஸ்லிம் மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டுமானால் உதவலாமேயொழிய, தேசிய மட்டத்தில் முஸ்லிம்களுக்கு உதவபோவதில்லை என்பதை நடைமுறையில் அஸ்ரப் அவர்கள் புரிந்து கொண்டார்.
அதன் காரணமாகவே அவர் சிந்தித்தார் , ( பெற்றோலில் இயக்கி விட்டு பிறகு மண்ணெண்ணெய்யில் ஓட்டும் ஜெனரேட்டர் போல) முஸ்லிம்களை ஓரணியில் சேர்ப்பதற்கு முஸ்லிம் என்ற நாமத்தை பயன் படுத்திவிட்டு, நடைமுறை சாத்தியமான நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு முஸ்லிம் என்ற நாமம் சரிப்பட்டு வராது என்று உணர்ந்ததன் காரணமாகவே "நுஆ" என்ற கட்சியை ஆரம்பித்து அதற்கு மரச்சின்னத்தை மாற்றீடு செய்து காலவோட்டத்தில் முஸ்லிம் என்ற நாமத்தை ஒதிக்கிவிட்டு முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்து காரியத்தை சாதிக்க வேண்டும் என்றே என்னியிருந்தார்.
அதன் காரணமாகவே 2000ம் ஆண்டய தேர்தலில் " நுஆ" என்ற கட்சியினூடாகவே இனிமேல் தேர்தல்களை சந்திப்போம் என்றும் அறிக்கை விட்டதுமல்லாமல் அந்த தேர்தலில் அந்த நாமத்தின்னூடாகவே தேர்தல் களத்தையும் சந்தித்துமிருந்தார்.
துரதிர்ஸ்ட்டம் காரணமாக அந்த ஆண்டு அவர் அகால மரணத்தை தழுவியிருந்தார். அதன் பிற்பாடு நடந்த விடயங்களை நீங்கள் அறிவீர்கள்.
அதன் பிற்பாடு அந்த கட்சியின் தலைமை பொறுப்பை பாரமெடுத்த ஹக்கீம் அவர்களுக்கு அஸ்ரப் அவர்களின் ஆளுமை இல்லாததன் காரணத்தினால், முஸ்லிம் என்ற நாமத்தை விட்டுவிட்டு வண்டியை ஓட்டமுடியாது என்று அவர் தீர்மானத்துக்கொண்டார். அஸ்ரப் அவர்கள் (பெற்றோலில் ஆரம்பித்து மண்ணெண்ணெயில் ஜெனரேட்டரை இயக்கும் வல்லமை அவரிடம் இருந்தது ஆனால் ஹக்கீம் அவர்களுக்கோ அந்த திறமை இல்லாத காரணத்தினால் எவ்வளவு செலவானாலும் பிரச்சினை இல்லை தொடர்ந்தும் பெற்றோலில் இயக்கினால்தான் நாம் தப்பலாம் என்ற காரணத்தினால் பெற்றோலில் தொடர்ந்தும் இயக்கிக்கொண்டு செல்கின்றார்).
* பெற்றோல் என்பது முஸ்லிம் என்ற நாமம் என்று புரிந்து கொள்ளவும்...!
*செலவு என்பது முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் நஸ்டம் என்று புரிந்து கொள்ளவும்...!
ஹக்கீம் அவர்கள் தன்னுடைய நலனுக்காக முஸ்லிம் காங்கிரசை இன்றுவரை பயன்படுத்தினாலும், அஸ்ரப் அவர்களுக்கு வந்த எதிர்ப்பு மாதிரி தனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக., சாணக்கியம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தான் அஸ்ரப்பை போல முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி அலட்டிக்கொள்ளாமலும், இனவாதிகளுக்கு மத்தியில் நடித்துக்கொண்டும் தனது காரியங்களை சாதித்துக் கொண்டும் வருகின்றார்.
இந்த விடயத்தை புரிந்து கொண்ட பேரினவாதிகளிலிலுள்ள இனவாதிகள் ஹக்கீம் ஒரு "செத்தபாம்பு" இவரினால் நமக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்று அறிந்துகொண்டு, முஸ்லிம்களை நாம் எவ்வளவு பந்தாடினாலும் இவர் சாணக்கியம் பேசிக்கொண்டிருப்பாரே தவிர, இவரினால் அஸ்ரப்பை போல் எதிர்ப்புகள் நமக்கு வராது என்று முடிவெடுத்துக் கொண்டார்கள், அதனால்தான் இனவாதிகள் ஹக்கீமை பற்றி அலட்டிக்கொள்வதில்லை.
ஆகவே இந்த விடயங்களை முஸ்லிம் சமூகமும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பற்கு இயலாமல் இருக்கின்றார்கள், இந்த இயலாமையை ஹக்கீம் அவர்கள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டு தனது வங்கியின் கணக்கிருப்பை நன்றாகவே உயர்த்தி வருகின்றார், மறுபக்கம் முஸ்லிம் சமூகத்தின் இறுப்பும் கேள்விக்குறியாகவே மாறிவருகின்றது.
இந்த விடயங்கள் அணைத்தும் இந்த கட்சியின் மூத்த போராளிகள் என்று கூறித்தெறியும் கோமாளிகளுக்கும் தெறியும், அவர்களும் ஹக்கீமை எதிர்த்தால் ஒன்றும் கிடைக்காது என்று அறிந்து கொண்டு யாழ்ரா அடித்து வருகின்றார்கள். இருந்தாலும் அதில் ஒரு சிலருக்கு இறைவன் தண்டனை கொடுத்துவிட்டான், மிதமுள்ள மற்றவர்களும் கூடிய சீக்கிரம் தண்டைனை அனுபவிப்பார்கள் நாங்களும் எங்கள் உயிர் கிடந்தால் பார்க்கத்தான் போகிறோம்.
ஆகவே,... முஸ்லிம் சமூகம் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், அல்லாது விட்டால்.... சில பேருடைய வங்கிக்கணக்கு உயரும்...? முஸ்லிம் சமூகத்தின் வங்கி கணக்கு குறையும்..? என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.