Full clean shave எடுத்து எந்நேரமும் பளபளவென இருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இப்போது நரைத்த தாடியுடன் திரிகின்றார்.
ஆனால்,எந்நேரமும் தாடியுடன் இருந்த அமைச்சர் விஜித முனி சொய்சா இப்போது தாடியை இறக்கிவிட்டு திரிகின்றார்.அதற்கு அவர் சொல்லும் காரணம்தான் விசித்திரமானது.
வேறு ஒன்றுமில்லை.இதுவரை காலமும் கருகருவென இருந்த அவரது தாடி இப்போது நரைக்கத் தொடங்கிவிட்டதாம்.நரைத்த தாடியுடன் இருந்தால் அது முதுமைத் தோற்றத்தைத் தந்துவிடும் என்று அஞ்சியே தாடியை மொத்தமாகவும் எடுத்துவிட்டாராம்.
தாடியை நீக்காமல் நரையை மறைப்பதற்கு சில கருப்புச் சாயங்களை அவரது நண்பர்கள் சிபாரிசு செய்தபோதிலும் அவை கிருமித் தாக்கங்களை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சி அவற்றை நிராகரித்துவிட்டாராம்.
[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]