பலஸ்தீன மக்களுக்காக மலையக உரிமைக் குரல் அமைப்பும் ஆதரவு..!

லையகத்தில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். அவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. தோட்டப்பகுதிகளிலும் வாழ்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அவர்களின் பிரச்சினைகளை, அபிலாசைகளை வெளியில் கொண்டுவருவதற்கு எவரும் முன்வருவதில்லை.

எனவேதான; இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒட்டுமொத்த மலையக மக்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு மலையக உரிமைக் குரல் அமைப்பு உதயமானது. அதன் நிர்வாகக்குழு அங்கத்தவர்களாக முஸ்லிம் சகோதரர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

அனைத்துலக மட்டத்தில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். அதில் ஒரு முக்கியப் பிரச்சினைதான் இஸ்ரேலில் சிறைவைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள் விவகாரம். குறித்த கைதிகளை விடுதலை செய்யுமாறு இலங்கையிலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் குரல்எழுப்பிவருகின்றனர். அவர்களது குரலுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நேசக்கரம் நீட்டியுள்ளது மலையக உரிமைக் குரல் அமைப்பு.

இந்நிலையில், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக இலங்கை பலஸ்தீன தூதுவராலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்துக்கு மலையக உரிமைக் குரல் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. 

மலையக உரிமைக் குரல் அமைப்பின் முஸ்லிம் பிரதிநிதிகளான ஊடகவியலாளர் ராயிஸ் ஹஸன் மற்றும் ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரி ஆகியோர் குறித்த கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ள சுமார் 6500க்கும் மேற்பட்ட பலஸ்தீன அரசியல் கைதிகள் கடந்த 22 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் வைக்கபப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் 300 சிறுவர்கள், 56 பெண்கள், 28 ஊடகவியலாளர்கள், 100 நோயாளர்கள் உள்ளடங்குகின்றனர். எனவே, சர்வதேச சட்டத்திட்டங்களை மீறும் வகையில் ஏதேனும் ஒரு நாடுசெயற்படுமானால் அதை அனுமதிக்க முடியாது. எனவே, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இது விடயத்திலும் குரல் எழுப்பவேண்டும்.

உண்ணாவிரதத்தில் இருக்கும் பலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயத்தில் முன்னெடுத்து வருகின்ற கையெழுத்து இயக்கத்துக்கு நாங்கள் பூரண ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -