பிறவ்ஸ்-
வட கொரிய ஜனாதிபதி யூதர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தனது நாட்டை விட்டுக்கொடுக்காமல் ஒற்றை மனிதனாக நின்றுகொண்டு அவற்றுக்கெதிராக சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். வடகொரியா நாட்டுடன் தென் கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் எதிரி நாடுகளாக முரண்பட்டாலும்; அமெரிக்காதான் அதன் பிரதான எதிரி நாடாகும்.
வட கொரியா நாட்டை யூதர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சி தோல்வியடைந்ததால், அந்த நாட்டை பழிவாங்கும் திட்டத்தை அமெரிக்கா என்றோ ஆரம்பித்துவிட்டது. யூதர்களுக்கு அடிபணியாமல் இருந்த நாடுகளில் 3 நாடுகள் பிரதானமானவை. பலஸ்தீன், கியூபா அடுத்தது வடகொரியா. இதில் பலஸ்தீனை சமாளிப்பதற்காக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தன்னுடைய முழுமையான அனுசரணை வழங்கி வருகின்றது.
அடுத்தது யூதர்களுக்கு சின்ன சொப்பனமாக இருந்தவர்தான் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்காவுக்கு அடங்காமல் தண்ணிகாட்டும் ஒருவராகவே அவர் இருந்தார். இதனால் அவரைக் கொல்வதற்கு 680 தடவைகள் முற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் உயிருடன் இருக்கும்போது ஒன்றையும் சாதிக்கமுடியாது என்று நினைத்த அமெரிக்கா, அவரது தம்பி ஜனாதிபதியான பின் அரசியல் தந்திரங்களால் அந்நாட்டை வழைத்துப்போட்டது.
யூதர்களின் ஆளுகைக்கு எந்த வகையிலும் ஒத்துவராத வடகொரியா மீது அமெரிக்கா மிகுந்த கோபத்தில் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்துவந்த பலரும் வடகொரியா அடக்குவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. அத்துடன் ஆணுஆயுத பரிசோனை மூலம் அமெரிக்காவுக்கே வடகொரியா சவால் விடுத்தது. உலக பொலிஸ்காரனான தனக்கு இன்னுமொரு நாடு சவாலாக இருப்பதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பப்போவதில்லை.
அமெரிக்காவின் கோபத்துக்கு இன்னுமொரு பிரதான காரணமும் இருக்கின்றது. அமெரிக்காவுக்கு திருட்டுத்தனமாக பிறந்த இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக போராடிவரும் பலஸ்தீனுக்கு வட கொரியாதான் ஆயுத விநியோகம் செய்து வருகின்றது. அமெரிக்காவை பரம விரோதியாக நினைக்கும் பலஸ்தீனுடன் வடகொரியா இணைந்து நட்புடன் செயற்படுகின்ற காரணத்தினால், வட கொரியாவின் உடன்பிறந்த விரோதியான தென்கொரியாவுடன் அமெரிக்கா சகவாசம் வைத்துள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் போல இந்த கூட்டு அமைந்துள்ளது.
ஆயுத பலத்தில் வல்லரசுகளாக இருக்கும் அமெரிக்காவும் வட கொரியாவும் அடிக்கடி வார்த்தை போர்களால் மோதிக்கொள்வதுண்டு. நடப்பாடண்டின் பின்னர் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்று பல ஆருடங்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த முறுகல்நிலை மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி இன்று எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இவை எல்லாவற்றையும் விட தனிக்காட்டு ராஜாவாக அமெரிக்காவுக்கு தண்ணிக் காட்டிக்கொண்டிருப்பவர்தான் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன். 33 வயதான இவர் உச்சக்கட்ட போர்க்குணம் கொண்டவர். அடிக்கடி ஆணுஆயுத பரிசோதனை செய்து, அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தின் வயிற்றிலும் புளியைக் கரைப்பதில் இவருக்கு நிகர் இவரேதான்.
கிம் ஜோங் உனை கட்டுப்படுத்தவேண்டும் என்பதற்காக அமெரிக்கா எவ்வளவோ முயற்சிகளை செய்துபார்த்தது. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது. அதனால், அந்த நாடு இருளில் மூழ்கியதே தவிர, ஆயுத தயாரிப்பு முயற்சியில் எந்த பின்னடைவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கிம் ஜோங் உனை பணியவைப்பதற்காக அவரது சகோதரை மலேசியாவில் வைத்து கொன்றார்கள். மகனை வைத்தே யூடியூப் தளத்தில் தவறாக பதிவுசெய்ய வைத்தார்கள். அவற்றாலும் எதையும் சாதிக்க முடியவில்லை.
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டுவதற்காக வட கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்கா தனது போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்க்கிக் கப்பல்களை அனுப்பிவைத்துள்ளது. ~கார்ல் வின்சன்| என்ற உலகின் மிகப்பெரிய விமானம்தாங்கி போர்க்கப்பல் அமெரிக்காவினால் அனுப்பப்பட்டுள்ளது. அணு ஏவுகணைகள் தாங்கிய விமானங்கள் நிறுத்தப்படக்கூடிய முக்கியமான கப்பல்களில் இதுவும்; ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கார்ல் வின்சன்| கப்பலில் ஒரே நேரத்தில் விமானங்கள் பறக்கவும், தரையிறங்கவும் முடியும். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் சடலமும் இந்தக் கப்பலில்; எடுத்துச் செல்லப்பட்டு நடுக்கடலில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திய போருக்கு, பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்ட இந்தக் கப்பல் பெரும் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்காவின் ~கார்ல் வின்சன்| கப்பலையும், நீர்மூழ்கிக் கப்பலையும் மூழ்கடிக்கப்போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் வாயிலாக அமெரிக்காவின் போர்க்கப்பல்களுக்கு ஜப்பான் தனது ~ஈசுமோ| என்ற தனது மிகப்பெரிய போர்க்கப்பல் மூலம் பாதுகாப்பு வழங்கி வருகின்;றது. இக்கப்பல நீரிலும் நிலத்திலும் தாக்குதல் நடத்தும் விமானம் தாங்கிகள் போன்றது என்றும் கூறப்படுகிறது.
வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனை மற்றும் திமிரான பேச்சுக்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில், வடகொரிய ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென 2013ஆம் ஆண்டு இஸ்ரேல் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அனுசரணையில் சட்டவிரோதமாக அணுஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளின் சாபம் என்று அதுவொரு ஆக்கிரமிப்பு நாடு என்று வடகொரியா வெளிநாட்டு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலகின் மத்திய கிழக்கு நாடுகளின் சமதானத்தை திசைதிருப்பவும் அரபு நாடுகளை ஆக்கிரமித்து, மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகின்றது.
அமெரிக்காவின் ஆதரவுடன் மத்திய கிழக்கில் ஒரு சட்டவிரோத நாடாக இஸ்ரேல் இருந்துகொண்டிருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிராந்தியங்களை மீட்பதற்கும் ஜெரூசலம் தலைநகர் அடங்கிய சுயாதீன பலஸ்தீன் உருவாக்கப்படுவதற்கு வட கொரியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும். இஸ்ரேல் உலக அமைதிக்கு மாபெரும் தடையாக இருக்கின்றது. இஸ்ரேலின் திமிர்பிடித்த இந்தப் பேச்சுக்கு அதனை விட ஆயிரம் மடங்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று வடகொரியா பதிலடி கொடுத்துள்ளது.
வடகொரியாவின் மேற்படி அறிவிப்பை, பலஸ்தீன் விடுதலைக்காக போராடிவரும் ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது. ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரியான சமி அபு சுஹ்ரி இதுதொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் வடகொரியா தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றது. இதற்கு ஹமாஸ் சார்பாக நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
ஆக்கிரமிப்பு மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் தொடர்ச்சியாக இழைத்துவருகிறது. சிரிய ஜனாதிபதி அல்ஆசாத் மற்றும் ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ருஹானி போன்ற பைத்தியக்கார கும்பலுடன் இருக்கின்ற இஸ்ரேல், இன்று வடகொரியாவை பைத்தியக்காரன் என்று சொல்வது வேடிக்கையான விடயம் என்றும் ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(நன்றி: விடிவெள்ளி 03.05.2017)