இலங்கை முஸ்லிம்கள் பலம்மிகு சமூகமாக இருக்க வேண்டும் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
முஸ்லிம்கள் இந்த நாட்டில் கல்வி, வர்த்தகம் உட்பட சகல துறைகளிலும் ஒரு பலம் பெற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பமாகும் என இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சகீல் ஹுசைன் தெரிவித்தார்.

ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனமும் நவமணிப் பத்திரிகையும் இணைந்து நடத்திய ரமழான் பரிசுமழை விழா வெள்ளிக்கிழமை (05) மாலை ஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றிய போதே உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது,

முஸ்லிம்களுக்கும் எங்களுக்குமான தொடர்பு இயற்கையானது. நெருங்கியது. இந்த நாட்டிலே வர்த்தகம், கல்வி, ஏனைய சகல துறைகளிலும் பலம் பெற்ற ஒரு சமூகமாகவே இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாகும்.

ஜிஹாத் என்பது முஸ்லிம்களுடைய கடைசி ஆயுதம். அடுத்தவர்களோடு நாங்கள் ஜிஹாத் செய்ய முன்னர் எங்களைப் பற்றி எங்களுக்குள்ளேயே நாங்கள் ஜிஹாத் செய்ய வேண்டியிருக்கின்றது என்பதை நான் ஞாபகப்படுத்துகின்றேன்.

நாங்கள் எங்களுடைய நப்ஷினுடைய ஜிஹாதைப்பற்றி சிந்திக்க வேண்டும். நாங்கள் எங்கள் மத்தியிலே, எங்களுடைய சமூகத்துடைய நிலைமையை கல்வி தொடர்பாக ஏனைய எங்களுடைய சூழலில் இருக்கின்ற விடயங்களைப்பற்றி சிந்தித்துச் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் உலகம் எங்களை நல்லவர்கள் எனக் குறிப்பிடுவார்கள். 

நாங்கள் இன்று கல்வியிலேதான் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். 30 வருட யுத்தத்தை வென்ற நீங்கள், இனி செய்ய வேண்டியது கல்வியிலே உங்களது கவனத்தைச் செலுத்துவதாகும். இலங்கையினுடைய கல்வித்தரத்தை மேம்படுத்த எங்களான உதவிகளை நாங்கள் செய்யத் தயாராக இருக்கின்றோம்.

உங்களுடைய பிள்ளைகளும் உங்களுடைய குடும்பத்தவர்களும் கல்வி நிலையிலே மேம்பட்டு நல்ல நிலையிலே, ஆளுமைமிக்கவராக வளரவேண்டும் என்று எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய எதிர்பார்ப்பு என்னவென்னால், ஒவ்வொரு முஸ்லிம் பிள்ளைகளும் டாக்டராக, பொறியியலாளராக, அது போன்ற சமனான தரங்களிலே வரவேண்டும். ஒரு சாதாரண தொழிலைச் செய்பவராக அன்றி எல்லோரும் நல்ல நிலையிலான கல்வினைப் பெறுகின்ற, உயர் தொழில்களை வகிக்கின்ற ஆற்றல்களை உருவாக்க வேண்டியதுதான் இங்கு இருக்கின்ற பெரும் சவாலாகும்.

இறுதியாக நான் தொடர்ந்தும் இலங்கை நலனுக்காகப் பாடுபடுவேன் என்பதையும் இச்சந்தர்ப்பத்திலே தெரிவித்துக் கொண்டு இப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -