வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபடும் நபருக்கு உதவிய ஷிப்லி பாறுக்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து துவிச்சக்கர மற்றும் மோட்டார் வண்டிகளுக்கு வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபடும் நபர் ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் வர்ணம் பூசும் இயந்திரம் (Air Compressor) ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

தன்னுடைய சுய தொழிலினை மேம்படுத்துவதற்காக வர்ணம் பூசும் இயந்திரம் ஒன்றினை தனக்கு பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் குறித்த நபர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கமைவாக தனது 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வியந்திரத்தினை பெற்று குறித்த துவிச்சக்கர மற்றும் மோட்டார் வண்டிகளுக்கான வர்ணம் பூசும் தொழிலாளியின்வீ வீட்டிற்கு 2017.05.20ஆந்திகதி-சனிக்கிழமை நேரடியாகச் சென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கையளித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -