ரத்துபஸ்வல பிரதேசத்தில், குடிநீர் கோரிப் போராடிய பிரதேசவாசிகள் மீது தாக்குதல் நடத்த ஆணை பிறப்பித்ததாகக் குறிப்பிடப்படும் இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்த போதே, அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரை, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி விவகாரம் தொடர்பில், இராணுவத்தைச் சேர்ந்த நால்வர், ஏற்கெனவே கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.