பரீட்சை எழுத சென்ற மாணவியின் உள்ளாடைய கழட்ட சொன்னதால் அதிர்ச்சி






 திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு இன்று(மே-7) நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

அதிகப்படியான சோதனை நடவடிக்கையால் தேர்வு எழுதும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்த சோதனையால் தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது.

அதிர்ச்சி..

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுந்த சென்ற பெண்ணின் உள்ளாடைய கழட்ட சொன்னதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இது குறித்து அந்த மாணவியின் தாயார் கூறுகையில், எனது மகள் தேர்வு மையத்திற்குள் சென்று திரும்பி வந்து தன்னுடைய மேல் ஆடையை என்னிடம் கொடுத்து சென்றார் என்றார்.

இதே போல் மற்றொறு பெண் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்திருந்தார். அவரது பேண்டில் உலோகத்தால் ஆன பட்டன் இருப்பதால் தேர்வறைக்குள்ளே செல்ல அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது தந்தை வெகுதூரம் சென்று தன்மகளுக்கு புதிய ஆடை வாங்கி கொடுத்து தேர்வறைக்குள் அனுப்பி வைத்தார்.

நீட் தேர்வின் போது இந்த கெடுபிடி காரணமாக மாணவிகளுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலைகள் ஏற்பட்டதாகவும் இதனால் மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் புகார் தெரவித்தனர்.(தினமலர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -