எம்.ரீ.எம்.பாரிஸ்-
புலனாய்வு ஊடகத்துறையில் ஆர்வம் காட்டும் இளம் ஊடகவியலாளர்களுக்கான 10 நாட்கள் கொண்டவதிவிடப் பயிற்சிநெறியொன்றை நடாத்த இலங்கை அபிவிருத்திக்கான ஊடகநிலையம் திட்டமிட்டுள்ளது. வீடியோவைப் பயன்படுத்தி புலனாய்வு ஊடக அறிக்கையிடல் உத்திகளை வழங்குவதன் மூலம் இளம் ஊடகவியலாளர்களின் அறிக்கையிடல் திறனை மேம்படுத்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இலவசமாக இடம்பெறவுள்ள பயிற்சி நெறியைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நிபுனத்துவ களப்பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சி முடிவில் பங்குபற்றும் இளம் ஊடகவியலாளர்கள் 10 புலனாய்வு ஊடக அறிக்கைகளை மேற் கொள்ள உள்ளனர். யுத்தத்திற்கு பின்னர் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை மையமாகக்கொண்டதாக இவை அமையும். செயற்திட்டமுடிவில் துறைகள் அமைச்சொன்றின் வழிகாட்டலில் புலனாய்வு ஊடககானொளி அறிக்கைகள் கொழும்பில் வெளியிட்டுவைக்கப்படும்.
வீடியோவை பயன்படுத்தி ஊடக அறிக்கையிடல் செய்யும் இளைஞர் யுவதிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். எதிர்கால இலக்கு, துறைசார் ஆர்வம், துறைசார் தகைமை, முன் அனுபவம் என்பவற்றின் மையமாகக் கொண்டு பயிற்சியாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
விண்ணப்ப முடிவு மே மாதம் 16ம் திகதியாகும். விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய முகவரி info@LDJF.org என்பதாகும். தொலைபேசி அழைப்புகள் எக்காரணங் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலதிகவிபரங்களுக்கு 0776653694 என்ற இலக்கத்தைதொடர்பு கொள்ளவும்.