அப்துல்சலாம் யாசீம்-
கல்முனையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த தனியார் பஸ்ஸில் இன்று (02) மாலை முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை. பேதிஸ்புர பகுதியைச்சேர்ந்த எஸ்.எச்.சந்ரசேன (54வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது - மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தில் கடமையாற்றி வரும் இவர் மரண வீடொன்றிற்கு செல்வதற்காக விடுமுறையில் வந்த வேளை திருகோணமலையில் பஸ் உரிமையாளர் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பதை அவதானித்து அவரை எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் அதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் பஸ் உரிமையாளரும் சாரதியும் ஒப்படைத்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிப்பதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.