ஓரிரு தினங்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் முகநூல் வாயிலாக ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார். அதனை பார்த்தவுடன் நானும் ஓர் மருதமுனை மண்ணில் பிறந்த மகன் என்பதனால் மிகவும் மன வேதனையை அளித்தது.
அந்தப் பதிவு என்னவென்றால் சாய்ந்தமருது சூரா சபையினால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை. அவ்வறிக்கையில் சாய்ந்தமருதிலுள்ள மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்த ஒரு பிரிவாக மாற்றாது சுயாதீனமான வைத்தியசாலையாகவே தொடர்ந்தும் செயற்பட வைத்தல். சாய்ந்தமருதிலுள்ள பாடசாலையான ஸாஹிரா கல்லூரிக்கு சாயந்தமருது அல்லது கல்முனை அல்லது மாளிகைக்காடு ஆகிய 3 ஊர்களில் ஒன்றை பிறப்பிடமாகவோ அல்லது வசிப்பிடமாகவோ கொண்ட ஒருவரை அதிபராக வைத்தல்.
இந்த அறிக்கையில் உள்ள இரண்டாவது தீர்மானமே எனது சிந்தனையை தட்டிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட அந்தக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய மருதமுனையை சேர்ந்த அந்த நபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் அதனை உறுதிப் படுத்தினார். தான் மருதமுனையை சேர்ந்தவர் என்பதனால் அந்தக் கல்லூரிக்கு அதிபராக இருக்க முடியாதாம், என்ற விபரத்தை மிக கவலையுடன் தெரிவித்தார்.
கல்முனையை பொறுத்தவரையில் மருதமுனை மக்களுக்கு இறைவன் கொடுத்த மாபெரும் அருட்கொடைதான் கல்வி. மருதமுனை மண் பல வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பட்டதாரிகள், அரச நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் என பல்வேறு துறைகளில் தெருவுக்கு தெரு கல்வியலாளர்களை உருவாக்கி இருக்கின்றது என்பது பெருமையான விடயம்தான்.
ஆனால் இவர்கள் அனைவரும் மருதமுனையில் மாத்திரம்தான் தொழில் செய்ய வேண்டும் என்றால் அது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும். எனவே அயலூர்களில் உள்ள பொறுப்பு வாய்ந்த சில அமைப்பிகளினால் எடுக்கப்படுகின்ற சில தீர்மானங்கள் உண்மையில் கவலையளிக்கின்ற ஓர் விடயம் மட்டுமல்லாமல் எமது எதிர்கால சந்ததிகளுக்கு பிரதேச வாதத்தினைக் ஊட்டுகின்ற ஒரு செயலாகவே கருத முடிகின்றது. இவ்வாறான கீழ் மட்ட சிந்தனைப்போக்கானது எமது ஊர்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் என்பதனை இவ்அமைப்புகளில் உள்ள படித்த மட்டத்திலுள்ளவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.
மருதமுனையை சேர்ந்த எத்தனையோ வைத்தியர்கள் மற்ற ஊர்களில் உள்ள வைத்திய சாலைகளில் தங்களது சேவையை புரிந்து வருகிறார்கள். அவர்களை தேவையில்லை என்று சொல்வார்களா?
மற்ற ஊர்களில் உள்ள அரசியல் வாதிகள் மருதமுனை மக்களின் வாக்குகளை வேண்டாம் என்று சொல்லுவார்களா? கடந்த தேர்தலின் போது மருதமுனை மக்களும் கல்முனை, நிந்தவூர் பிரதேசத்திலுள்ளவர்களுக்கு வாக்களித்துதான் இன்று அவர்களை பிரதி அமைச்சர்களாக்கி உள்ளார்கள் என்பதனை மறந்து விடக்கூடாது.
எனவே இவ்வாறான பிரதேசவாத சிந்தனைப் போக்கினால் இம்மண்ணில் பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பலி வாங்கப்படுவதனை பிரதேச அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் இருப்பது மேலும் கவலையளிக்கின்றது.
பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தான் அந்த பாடசாலையில் பிரச்சினை ஏற்பட்டபோது இவரை அந்த பாடசாலைக்கு அதிபராக கொண்டு சென்றார். கடந்த மூன்று வருடங்களாக முடிந்தளவு தனது பங்களிப்பினை வழங்கி குறிப்படத்தக்க வளர்ச்சியினை காட்டியுள்ளார் என அந்த பிரதேசத்திலுள்ளவர்களே கூறி வருகின்றனர். இப்போது ஒரு சாரார் அவரை அங்கிருந்து துரத்துவதற்கு முயற்சி மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த அரசியல் வாதிகள் இந்த மண்ணில் பிறந்த மக்களின் தொழில் வாய்ப்புகள் பிரதேசவாதத்தினால் பாதிக்கப்படுவதனை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என நம்புகிறோம்.