சமுகப் பணியில் ஸக்காப் முபாரக் சிறப்பு மலர் வெளியீட்டு விழா (படங்கள்)

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முகப் பணியில் ஈடுபட்டு பல்வேறுபட்ட விதத்திலும் தொண்டாற்றி வரும் ஆயுர்வேத வைத்தியர் முபாறக் அவர்களை கௌரவிக்கும் வகையில் கம்பஹா மாவட்ட இஸ்லாமிய பாடசாலைகள் சம்மேளனத்தினால் சுயாதீன தொலைக்காட்சியின் செய்திப்பிரிவைச் சேர்ந்த சித்தீக் ஹனிபாவின் தொகுப்பில் சமுகப் பணியில் ஸக்காப் முபாரக் சிறப்பு மலர் வெளியீட்டு விழா கடந்த 30ஆம் திகதி கல்-எளிய அலிகார் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.ஜே.எம்.புர்கானின் முன்னிலையில் கம்பஹா மாவட்ட இஸ்லாமிய பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எச்.எம்.ஸூபைர் ஜே.பி தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் வை.எல்.எம். நவவியும்; கௌரவ அதிதிகளாக பயாஸ் சலீம், கல்-எளிய அல்-மஸ்ஜிதுஸ் ஸூப்ஹானி பள்ளிவாசலின் தலைவர் ஏ.எச்.எம்.கலீல் உள்ளிட்ட பெருந்திரலான பிரமுகர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் இதன்போது வரவேற்புரையை எஸ்.எச்.எம்.ஸூபைரும், சிறப்புரையை ஜாமிய்யா நளீமியாவின் விரிவுரையாளர் எஸ்.எச்.எம்.பளீழும், வாழ்த்துரையை மௌலவி எம்.என்.எம்.இஜ்லானும், கவி வாழ்த்தை கலாபூசணம் என்.நஜ்முல் ஹூஸைனும், மலர் அறிமுகத்தை தாஜூல் உலூம் கலைவாதி கலீலும் வழங்கினர்.

இதன்போது சிறப்பு மலரின் முதற்பிரதியை இலக்கியப் புலவர் ஹாஷிம் உமர் ஆயுர்வேத வைத்தியர் முபாறக்கிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன் ஏனைய பிரதிகளையும் பிரதம அதிதி உள்ளிட்ட ஏனைய பிரமுகர்களும் வழங்கி வைத்தனர். இதேவேளை புரவலர் ஹாசிம் உமர் ஒரு தொகுதி புத்தகங்களை பாடசாலை நூலகத்திற்கு வழங்கினார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -