ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற கண் பரிசோதனையின் போது தெரிவு செய்யப்பட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று (06) சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான கௌரவ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில், அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம் பரீட், முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர், ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் செயளாலர் அஷ்ஷைக் ஏ.எல்.எம் மும்தாஸ் (மதனி) மற்றும் ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அண்மையில் நடைபெற்ற கண் பரிசோதனையின் போது தெரிவு செய்யப்பட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடிகள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ஹம்ஸா கலீல்-