க.கிஷாந்தன்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது. இக்கூட்டம் கினிகத்தேனை நகர பஸ் தரிப்பிடத்தில் 01.05.2017 அன்று இடம்பெற்றது. கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது.
இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.