முச்சக்கரவண்டி - லொறி விபத்து

க.கிஷாந்தன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 06.05.2017 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருக்குமே படுங்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -