மஹிந்த ராஜபக்ச அவர்களே.! உங்களின் வெற்றி உறுதியாகிவருகின்றது.

ஹிந்த ராஜபக்ச அவர்களே..! உங்களின் வெற்றி உறுதியாகிவருகின்றது, இந்த நேரத்தில் உங்களோடு இருந்துகொண்டு கோடிகளையும், பதவி பட்டங்களையும் சுகபோகங்களையும் அனுபவித்த முஸ்லிம் தலைவர்களும் எம்பிக்களும் உங்களை கைவிட்ட நிலையில், எங்கோ ஒரு மூலையிலிருந்து உங்களின் தைரியத்தையும், வீரத்தையும் மறக்காமல் பாராட்டி எழுதியும் பேசியும் வருகின்றோம்.

இந்த நேரத்தில் நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால்,... எந்த இனவாதிகளை முன் வைத்து இந்த மேற்குலகமும், டயஸ்போராக்களும் திட்டம் தீட்டி உங்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தார்களோ, அவர்களுக்கு செருப்பால் அடிப்பதுபோல் இனிவரும் காலங்களில் சிறுபாண்மை மக்களை நீங்கள் அரவணைத்துச் செல்லவேண்டும்.

உங்களோடு இருக்கும் சிங்கள மக்கள் நிச்சயம் அதற்கு ஆதரவு வழங்குவார்கள், இந்த இனவாதிகள் மேற்குலக ஏஜண்டுகளாக இருந்துகொண்டு முஸ்லிம் மக்களை உங்களிடமிருந்து பிரித்ததை நிச்சயமாக விரும்பமாட்டார்கள், நீங்கள் தோல்வி அடைந்தபோது உங்களுக்கு வாக்களித்த ஐம்பத்தெட்டு லட்சம் மக்களும் இந்த சதிச்செயலை கண்டு மனம் நொந்திருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

இதற்கு படிப்பிணை காட்டுவதற்கு இன்னும் ஒரு தேர்தலையும் அவர்கள் சந்திக்கவில்லை, அந்த சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயமாக இந்த மேற்குலக ஏஜண்டான இனவாதிகளுக்கு சிங்கள மக்கள் பதில் அளிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளதேவையில்லை.

ஆகவே, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள உங்களை நாங்களும் ஆதரிக்கின்றோம், மேதின கூட்டத்தில் உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது, நீங்கள் எதிர்காலத்தில் ஆட்சியை அமைக்கும் நிலைவந்தால் இந்த இனவாதிகளை பக்கத்திலும் நீங்கள் சேர்த்து விடக்கூடாது, அதன் பிற்பாடு நீங்கள் கிழக்காசியாவின் வீரச்சிங்கம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

யாரோ செய்த அநியாயத்துக்கு முஸ்லிம் சமூகத்தை குற்றம் கானுவதைவிட,, அவர்களை நீங்கள் அரவணைத்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு விடை பெறுகின்றோம்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -