இரண்டரை தசாப்தகாலமாக கல்குடா பிரதேசத்தில் எவராலும் அழிக்க முடியாத விளையாட்டு கழகமாகவும் சமூக அமைப்பாகவும் இருந்து வருகின்ற சாட்டோ விளையாட்டு கழகத்தினை மீண்டு தூக்கி நிறுத்துவதற்காக அக்கழகத்தில் நீண்ட காலமாக தலைமை பதவியினை வகித்ததோடு தலைமை பதவியினை இளம் தலை முறையினருக்கு விட்டு கொடுப்பு செய்திருக்கும் சமூக ஆர்வலரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ வை.எல்.மன்சூர் மீண்டும் சாட்டோ கழகத்துடன் கைகோர்த்து செயற்பட உள்ளதாக இன்று நடைபெற்ற கழகத்தின் நிருவாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கழகத்திற்கு தேவையான அனைத்து குறைபாடுகளை மிக விரைவில் நிவர்த்தி செய்து தருவதோடு, கழக உறுப்பினர்களுகான வேலை வாய்ப்புக்கள், சமூக சேவைகளுக்கான நிதி உதவிகள், மற்றும் அரசியல் அதிகாரத்துடனான எதிர்கால கழகத்தின் திட்டங்களுக்கான வழி காட்டல்கள் என பல வாக்குறுதிகள் சாட்டோ வை.எல்.மன்சூரினால் மேற்குறிப்பட்ட நிருவாக கூட்டத்தில் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டமை முக்கிய விடயமாக சாட்டோ விளையாட்டு கழகத்தினால் பார்க்கப்பட்டது.