ரஷ்யா பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக அமைச்சர் ரிஷாட்..!

ஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம், 2 ஆம், 3 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

இன்று (02) காலை கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் அலெக்ஸாண்டர் கார்ச்சேவ் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த அழைப்பை நேரடியாக கையளித்து மாநாட்டில் பங்கு பற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

ரஷ்யத் தூதுவருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான இந்த சந்திப்பின் போது இலங்கை ரஷ்யா நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் பரஸ்பர வர்த்தகம் தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -