ஹஸ்பர் ஏ ஹலீம்-
கடந்த மாதமளவில் கிழக்கு பட்டதாரிகள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் தங்களுக்கான பட்டதாரி நியமனங்களை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை நிலவியமையும் காரணமாக நீதிமன்ற உத்தரவை மீறியும் சட்டத்துக்கு முரணாக நடந்தமையும் பொலிஸாரினால் நீதிமன்றம் ஊடான தடை உத்தரவு வழங்கப்பட்டதை காலால் கசக்கி கிழித்தெறிந்தமையை தொடர்ந்து திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் முன் சட்டத்தரணிகபட்வேலையற்ற பட்டதாரிகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது இதில் எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானினால் நான்கு பேருக்கு வேலையற்ற பட்டதாரிகளுக்கான உத்தரவு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான கடும்போக்கு கொண்ட இந்த அரசாங்கம் பட்டதாரிகளை பல கஷ்டங்களை அனுபவித்து வேலையை பெறுவது எம்மால் சகிக்க முடியாது.நாட்டில் அரச பல்கலைக்கழகங்களிலும் உள்வாரி வெளிவாரியான பட்டங்களை பெற்று வீதியில் பல நாட்கள் கொண்ட போராட்டங்களும் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வருவதனை தொடர்ந்து பட்டதாரிகளின் கைதும் அவர்களின் உரிமைகளை இந்த அனசு பறிக்கின்றது.
அரசியல் வாதிகள் இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி முறையான நியமனங்களை வழங்கியிருந்தால் வீதிப்போராட்டங்களோ கைது செய்யப்படுதலோ இடம்பெறாது .கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பலரும்சம்பரந்தப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நடவடிக்கைகளை முறையாக கையாள்வதிலும் பல பின்னடைவுகளை கண்டு கொண்டதும் வேலையற்ற பட்டதாரிகளை தொடர்ந்தும் ஏமாற்றியே காலத்தை வீண்விரயம் செய்கின்றனர்கள்.
இனியாவது வீதியில் இறங்கிப் போராடாத கல்விக்கொள்கைகளை உருவாக்க அரசாங்கம் முன்வரவேண்டும் பட்டங்களை பெற்றதும் அரச துறையை எதிர்பார்க்கும் பட்டதாரிகளின் கனவு நனவாகுமா என்பதே எம்மனதில் குடிகொண்டிருக்கிறது தொடர்தும் போராட்டம் இல்லாத ஆர்ப்பாட்ட இல்லாத அமைதியான பட்டதாரிகள் நியமனத்தை விரைவாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே வேலையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கையாகும்.